பாரம்பரியம் மற்றும் அங்கக வேளாண்மை
பாரம்பரிய மற்றும் அங்கக வேளாண்மை இவை இரண்டும் வெவ்வேறு வழக்கங்களை கொண்டவையாகும்.
பாரம்பரிய வேளாண்மை |
அங்கக வேளாண்மை |
இயற்கையை ஆளும் தன்மையுடையது |
இயற்கையுடன் இணைந்தது |
அத்துமீறல், நிலச் சுரண்டல் |
கட்டுப்பாடுகள் நிறைந்தது |
அங்கக வேளாண்மை, பாரம்பரிய வேளாண்மையிலிருந்து அடிப்படையிலேயே பல மாற்றங்களைக் கொண்டது. அங்கக வேளாண்மை இயற்கையுடன் இணைந்து செயல் படுவதால் இயற்கைச் சூழலுக்கு பாதுகாப்பாக அமைகிறது. அங்கக வேளாண்மையில்
- பூச்சிக்கொல்லி முற்றிலும் தவிர்க்கப்படுகிறது
- பயிர்சுழற்சி கட்டாயப்படுத்தப்படுகிறது.
ஆயினும் சில உள்ளீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. பூச்சி இனக்கவர்ச்சிப்பொறி போன்றவை அவசியமாகக் கருதப்படுகிறது.
நவீன வேளாண்மை:
இன்றைய ரசாயன வேளாண் முறையில் அதிக மகசூல் மற்றும் லாபம் இருந்தாலும் அவை பாதகமானது என்பது தவிர்க்க முடியாதது. அவற்றுள் சில,
நிலவளத்தை குறைத்தல் |
: |
அதிக ரசாயனங்களை பயன்படுத்துவதாலும், பயிர்சழற்சி செய்யாததாலும், நிலத்தின் ஊட்டச்சத்து அளவு குறைந்து வருகிறது. |
ரசாயன உரம் |
: |
மண்ணின் இயற்கை தன்மையை அழிக்கும் செயற்கை ரசாயன உரங்களை பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கின்றனர் |
நைட்ரேட் (தழைச்சத்து) அடித்து செல்லப்படுதல் |
: |
இரசாயன உரங்களில் இருக்கும் நைட்ரேட் மழையினால் அடித்து செல்லப்பட்டு குடிநீரை அசுத்தப்படுத்துகிறது |
மண் அரித்தல் |
: |
அதிக மறை ஆழமான உழவு செய்தலினால் மேல்மட்டத்தில் உள்ள மண் அரித்து செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது |
மண் இறுகுதல் |
: |
மண்ணின் அமைப்பு மிகவும் சேதம் அடைந்து வருகிறது. டிராக்டர் பயன்படுத்தி உழுவதால் மண்ணின் அமைப்பு மாறி இறுகிய நிலை ஏற்பட்டுவருகிறது |
உணவு மாசுபடுதல் |
: |
இரசாயனப் பொருட்களால் உணவு மாசுபடுதல் தவிர்க்க முடியாத ஒன்றாகும். இது சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மிகவும் மாசுபடுத்தப்படுகிறது |
|